வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 20ம் திகதி

 

தேவமாதாவின் கடைசி வியாகுலங்களின்பேரில் செபிப்போமாக


செபம்:

வியாகுல மாதாவே! சிலுவையிலிருந்து இயேசுநாதர் அருளப்பரைக் காட்டி இதோ உம்முடைய மகனென்று சொன்னபொழுது கிறிஸ்தவர்கள் எல்லாரையும் உமக்குப் பிள்ளைகளாக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்யான சத்தியமாகையால்

நீர் எனக்கு தாயாராயிருக்கிறீரென்று நிச்சயிக்கிறேன். ஆனால் இன்றுவரையில் நான் உம்முடைய பிள்ளை என்பதற்கு தக்க பிரகாரமாய் நடவாமல் என் பாவத்தினால் உமக்கு அநேகவிசை கஸ்தி வருவித்தேன். இனி நான் பசாசின் தந்திரத்தில் அகப்படாதபடிக்கு என்பேரில் இரங்கி என்னைக் காப்பாற்றி உம்மோடுகூட மோட்ச இராச்சியத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று மன்றாடுகிறேன். – ஆமென்.   


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

தயாளமுள்ள தாயாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..