வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 19ம் திகதி

தேவமாதாவுக்கு வியாகுலம் உண்டாக்கின மூன்று முகாந்திரங்களின்பேரில் செபிப்போமாக


செபம்:

இயேசுநாதருடைய பரிசுத்த தாயாரே! ஆண்டவர் எனக்கு செய்தருளிய எண்ணறிந்த உபகாரங்களையும் நான் அவருக்கு காண்பித்த நன்றிகெட்டதனத்தையும் நினைக்கும்போது கொடூரமான தீர்வைக்குள்ளாவேனென்று பயப்படுகிறேன்.

ஆனால் பாவிகளுக்கு அடைக்கலமாகச் சர்வேசுரன் உம்மை வைத்திருக்கிறாரென்று நினைவுகூர்ந்து எனக்காக வேண்டிக்கொள்ளுவீரென்றும் நான் உமது திருக்குமாரனிடத்தில் கணக்கு சொல்லப்போகிற நாளில் எனக்காக மனுப்பேசுவீரென்றும் நம்பிக்கையாய் இருக்கிறேன். ஆகையால் முன் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்து இனிமேல் நான் அந்தப் பாவங்களைச் செய்யாதிருக்க எனக்கு உதவி செய்தருளும். – ஆமென்.  


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

கிறிஸ்தவர்களுக்கு சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..