வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 18ம் திகதி

தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தின்பேரில் செபிப்போமாக

செபம்:

என் திவ்விய தாயாரே! என்பேரில் மிகுந்த பட்சம் வைத்து எனக்கு எண்ணிக்கையில்லாத உபகாரங்களைச் செய்து, இஷ்டப்பிரசாதத்தால் வருகிற மன அக்களிப்பை என் ஆத்துமத்தில் விளைவிக்கும்படிக்கு எவ்வளவு பிரயாசைப்பட்டீர்!

நான் உமக்கு சந்தோஷம் வருவிக்கத்தக்கதாக இன்றுவரையில் எதிலும் பிரயாசைப்பட்டவனல்ல. ஆகையால் உமது திருமைந்தனாகிய இயேசுநாதர் வெளிப்படுத்தின வேத சத்தியங்களை இனியேனும் அறிந்து விசுவசிக்கவும், அதன்படி நடக்கவும் ஆசையாயிருக்கிறேன். இயேசுநாதரிடத்தில் நீர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்து என் ஆசை நிறைவேறும்படி என்பேரில் தயவாயிருந்து எனக்கு உதவி செய்தருளும். – ஆமென்.   


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

கிறிஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ü புனித பெர்நர்துவின் செபம் ……

ü சென்ம பாவமில்லாமல் …..

ü விண்ணுலகில்… அருள்… திரி..