வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 17ம் திகதி

திருக்குடும்பமாகிய இயேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததின் பேரில் செபிப்போமாக

செபம்:

என் இரட்சகருடைய தாயாரே! உமது திருக்குமாரனாகிய இயேசுநாதரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீர் அடைந்த சந்தோஷத்தை குறித்து நான் இந்த உலகில் நல்ல ஒழுக்கத்துடன் நடக்கும்படிக்கு எனக்கு உதவி செய்தருளும்.

பகை, கோபம் முதலான துர்க்குணங்களை என் ஆத்துமத்தில் நுழையவிடாமலும் எவ்விடத்திலும் எக்காலத்திலும் எவருக்காகிலும் மனஸ்தாபம் வருவியாமலும், எல்லாரோடும் சமாதானமாயிருந்து, நான் கஸ்திப்படும் வேளையில் அதைப் பொறுமையோடு அனுபவித்துச் சமாதானமுள்ளவர்களுக்குச் சர்வேசுரனால் கொடுக்கப்படுகிற சம்பாவனை எனக்கும் கிடைக்கும்படிக்கு மன்றாடுகிறேன்.    


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

உம்மிடத்தில் பிறந்து எங்களை மீட்க வந்த இயேசுநாதர் உமது வழியாக எங்களுடைய வேண்டுதலை ஏற்றுக் கொள்ள அருள் புரிவாராக.

 

ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..