வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  16ம் திகதி

தேவமாதா சுத்திகரத்தின் பேரில் செபிப்போமாக

செபம்:

மிகவும் இரக்கமுள்ள கன்னிமரியாயே, உம்மை மகா அன்புக்குப் பாத்திரமான மாதா என்னும் பெயரால் கிறிஸ்தவர்கள் கூப்பிடுகிறதை நான் கேட்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியுறுகிறேன்.

எங்கும், எல்லா மனிதராலும் நேசிக்கப்படத்தக்க மாதாவே! இராஜாதி இராஜாவாகிய சர்வேசுரன் உமக்குண்டான சவுந்தரியத்தையும் நற்குணங்களையும் அளவில்லாதவிதமாய் நேசிக்கும்பொழுது எண்ணப்படாத உபகாரங்களை எனக்குச் செய்த தாயை நான் சிநேகியாதிருப்பேனா? அப்படியல்ல, மற்றவர்களைவிட அதிகமாய் உம்மை சிநேகிக்க என்னால் கூடாததால், கஸ்திப்பட்டு நான் உமக்கு கொடுக்கிற என் இருதயத்தையும் உமது சித்தத்தின்படியே நடத்தி அதில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் பிறர் சிநேகம் என்ற இம்மூன்று புண்ணியங்களையும் விளைவிக்க வேண்டுமென்று மன்றாடுகிறேன்.    

 

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

நேசத்துக்குரிய தாயாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..