வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  15ம் திகதி

தேவ திருப்பாலனின் பிறப்பு

செபம்:

என் ஆத்துமமே, சம்மனசுகளுக்கும் மனுமக்களுக்கும் மேலாகவிளங்கும் தேவ திருப்பாலனைப் பார். இதோ உலகத்துக்கு இராக்கினி எல்லா மக்களிலும் அதிக அழகு சோபனமுள்ள பாலனாக ஆராதனைக்குரிய இயேசுநாதரைத் தமது திருமடியில் வைத்து மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொள்ளுகிறாள்.

எவ்வித ஆனந்தமும் நிறைந்த தாயாரே! நான் உம்முடைய திருமடியில் என்னுடைய மீட்பரை காணுகின்றபொழுது பயம்நீங்கி அவரையும் உம்மையும் மகா உருக்கத்துடன் சிநேகிக்கிறேன். அவர் எனக்காகச் சிறுபிள்ளையாய்ப் பிறந்து மாட்டுக்கொட்டிலில் இருக்கும்பொழுது என்னைத் தண்டிப்பாரென்று நான் பயப்படக்கூடுமோ? அவர் என் பாவங்களை நிவிர்த்திப்பதற்கு எத்தகைய கஸ்திவாதனைகள் அனுபவிக்கும்பொழுது என்னைப் புறக்கணித்துத் தள்ளுவாரோ? நான் அவரை முழுமனதோடு அணைத்துக்கொண்டு நேசிப்பேனாகில் மீட்புப் பெறுவேன் என்பது குன்றாத சத்தியம். ஆனால் அவருடைய இஷ்டப்பிரசாதத்தை நான் இழந்து போகாதபடிக்கு உலகம், பசாசு, சரீரம் என்ற மூன்று சத்துருக்களையும் நான் ஜெயிக்கும் பொருட்டு உதவி செய்தருளும் தாயே. 

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

நல்ல உபகாரியே, உமது பேரில் என் நம்பிக்கை எல்லாம் வைத்திருக்கிறேன்.


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..