வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  14ம் திகதி

தேவமாதாவும், புனித சூசையப்பரும் நசரேத்திலிருந்து பெத்லகேமுக்குச் செய்த பயணம்

செபம்:

ஓ! மரியாயே, பரிசுத்த தாயாரே, உம்முடைய பிதாவிடத்தில் இயேசு கிறிஸ்துநாதர் மத்தியஸ்தராய் எனக்காக மனுப்பேசுகிறாரென்றும், நீரே உம்முடைய திருக்குமாரனிடத்தில் நல்லுபகாரியாய் எனக்காக மன்றாடுகிறீரென்றும் நினைத்து உறுதியான நம்பிக்கையுள்ளவனா(ளா)க இருக்கிறேன்.

இன்றுமுதல் நான் சாகுமளவும் உம்மையும், உம்முடைய திருக்குமாரனையும் இடைவிடாமல் வேண்டிக்கொள்ளுவேன். நான் இந்நாள்மட்டும் செபம் செய்வதில் மிகவும் அசட்டையுள்ளவனா(ளா)க இருந்தேன். இதனால் என் ஆத்துமமானது மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. என்னுடைய ஆதரவே, எனக்கு மிகவும் அவசியமாயிருக்கிற தேவ வரமாகிய செபத்தியான சுகிர்த வரத்தை எனக்குப் பெறுவித்தருளும். நான் இடைவிடாமல் பக்தியுடனும் வணக்கத்துடனும் விசுவாச நம்பிக்கையுடனும் செபம்செய்ய எனக்கு கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். நான் உம்மை இடைவிடாமல் பக்தியோடு வேண்டிக் கொள்வேனாகில் ஒருக்காலும் கெட்டுப்போக மாட்டேன்.  


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

தேவமாதாவே! உம்முடைய தயாபமுள்ள திருக்கண்களை எங்கள்பேரில் திருப்பியருளும்.


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..