வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 13ம் திகதி

 

தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருக்கிறாள் 


செபம்:

மீட்பரின் மகிமைநிறை அன்னையே! எங்களுக்கு அன்னையாகவும், அடைக்கலமாகவும், ஆதரவாகவும் இருக்கச் சித்தமானீரே. நீர் மீட்பருடைய அன்னையாக இருப்பதால் அவர் உமது மன்றாட்டைப் புறக்கணிக்க மாட்டார்.

நீர் எங்களின் அன்னையாய் இருப்பதால் எங்களிடம் மிகுந்த தயையும் பட்சமும் வைத்திருக்கிறீர். அதிசயத்துக்குரிய மாதாவே! ஏக சர்வேசுரனை அதிக பக்தியோடு சேவிக்கும்பொருட்டு தங்களை முழுதும் அர்ப்பணிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் அத்தியந்த பாக்கியவான்களாம். தான் செய்த பாவங்களை வெறுத்து இஷ்டப்பிரசாதத்தை அடையும்படிக்கு உம்முடைய அடைக்கலத்தில் ஓடிவருகிற பாவி எவனோ, அவனும் பாக்கியவானாம். பரிசுத்த கன்னிகையே உம்முடைய தயாளத்தினால் ஏவப்பட்டு உமது அண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து நான் செய்த குற்றங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பிரலாபத்தோடு அழுகிறேன். என் நிர்ப்பாக்கியமான ஆத்துமத்தின்பேரில் இரக்கமாயிரும். என் பாவங்களுடைய கட்டுகளை அவிழ்த்தருளும். என்னுடைய துர்க்குணங்களையும் ஆசாபாசங்களையும் அடக்கியருளும். நான் உம்மோடுகூட சர்வேசுரன் அண்டையில் எப்பொழுதும் வாழ்ந்திருக்க எனக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்தருளும் தாயே.      

 

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

பாவிகளுக்கு அடைக்களமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..