வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 12ம் திகதி

தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்தபோது இயேசு கிறிஸ்துவால் செய்யப்பட்ட அற்புதங்களின்பேரில் செபிப்போமாக

செபம்:

எனது திவ்விய தாயாரே! என் நல்ல உபகாரியே ஆண்டவருடைய அன்னையாக இருக்கப் பாத்திரமானவளே, நான் அநேக கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டதால் உமது அருகில் வர அற்பமும் பேறு பெற்றவன(ள)ல்ல,

ஆகிலும் நீர் என்னைப் புறக்கணித்துத் தள்ளினாலும், நான் உமது கிருபையை உறுதியாக நம்பி உம்மிடத்தில் அபயமிட்டு ஒரு நாளாகிலும் உம்மை மன்றாடாமல் போகிறதில்லை. நீர் கரைகாணாத தயை சமுத்திரமாய் இருக்க நான் உம்மிடத்தில் தேவசகாயத்தை அடையாதிருந்தால் யாருடைய அடைக்கலத்தில் ஓடுவேன்? அன்புள்ள தாயே! சர்வேசுரன்மீதுகொண்ட அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் பிறகு எல்லா நம்பிக்கையையும் உம்மிடத்தில் வைக்கிறேன். உம்முடைய ஆதரவை மன்றாடி உம்முடைய அடைக்கலத்தில் சேருவேனாகில் பேரின்ப இராச்சியத்தில் உம்முடைய உதவியைக் கொண்டு மீட்புப்பெற்று மோட்சவாசிகளுடன் நான் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.  


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

எங்களுடைய ஆண்டவளே, எங்களுடைய உபகாரியே, எங்களுக்காக உம்முடைய திரக்குமாரனிடத்தில் வேண்டிக்கொள்ளும்.

 

  • புனித பெர்நர்துவின் செபம் ...…
  • சென்ம பாவமில்லாமல் .....
  • விண்ணுலகில்... அருள்... திரி..