தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தி;க்கிறார் அச்சமயத்தில் தேவமாதாவிடம் விளங்கிய மூன்று பிரதான புண்ணியங்கள்


செபம்:

பரிசுத்த கன்னிகையே! நீர் உம்முடைய சுற்றத்தினராகிய புனித எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும்போது அன்னை உம்முடைய வார்த்தை கேட்டுத் தன் பிள்ளை மகிழ்ச்சியினால் துள்ளியதென்று அகமகிழ்ந்து உச்சரித்தாள்.

ஓ! என் தாயே, உமது திருவாக்கியத்தைக் கேட்பேனென்று உறுதியாய் நம்புகிறேன். ஆனால் அந்த அதிஷ்ரம் எனக்கு அனுகூலமாகட்டும். இந்த கண்ணீர் கணவாயிலே உமது திருப் பெயரை உச்சரிக்கும்பொழுது என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் உருகிப் போகக்கடவது. மரியாள் என்னும் திருநாமமே, என் இருதயத்தில் எப்போதும் வாசம்செய்யும், என் வாக்கில் எப்போதும் வரரும், என் சந்தோஷமாயிரும். என் ஆதரவாயிரும், என் பாக்கியமாயிரும். மரியாள் என்னும் திருநாமமே, உம்முடைய அடைக்கலத்தில் ஒருவனாகிலும் அவநம்பிக்கையாய் இருக்கமாட்டார். 


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

ஓ! தேவமாமதவே, மெய்யான சர்வேசுரனான இயேசு கிறிஸ்துநாதர்பேரில் என்னுடைய இருதயம் தேவசிநேகத்தால் பற்றி எரியச் செய்தருளும்.


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..