வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  10ம் திகதி


வானதூதர் சொன்ன மங்கள வார்த்தையின்பேரில் செபிப்போமாக


செபம்:

 என் ஆண்டவளே! மீட்பரின் தாயாரே! சுகல பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே! கன்னிகைக்குள் பரிசுத்த கன்னிகையே! சிருஷ்டிகளுக்குள் மேலானவளே!

உம்மை மனிதர் எல்லாம் எப்போதும் வாழ்த்தி வருவார்கள். நான் அவர்களோடுகூட உம்முடைய மகிமையை துதித்து உம்முடைய மகத்துவத்தை சகலருக்கும் அறிவிப்பேன். நான் உம்மை என்னால் ஆனமட்டும் வணங்கி வணங்கி நேசித்து உம்மை எல்லோரும் சிநேகிக்கும்படி செய்யப் பிரயாசைப்படுவேன். மனுமக்கள் எல்லாரும் உமதருகில் வந்து உமக்குத் தக்க வணக்கத்தைக் காண்பித்து, ஏக மீட்பரான உமது திருமைந்தனை நேசித்து, அவருக்கு ஊழியம் பண்ணவேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன். இந்தப் பாக்கியம் உம்முடைய கிருபையினால் எனக்குக் கிடைக்கும் படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.    


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க!


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..