வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 9ம் திகதி


கர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா கொண்டொழுகிய சுகிர்த புண்ணியங்களின் பேரில் செபிப்போமாக 


செபம்:

இயேசுக்கிறிஸ்துவின் இனிய அன்னையே! ஆண்டவருடைய வார்த்தையானது உமது திரு உதரத்தில் அவதாரம் எடுக்கும்பொழுது நீர் கொண்டிருந்த சுகிர்த உணர்ச்சிகள் சொல்லமுடியாது.

சகல நன்மை நிறைந்த சர்வேசுரன் உமது திருமைந்தனானார் என்பதைப் பார்த்து அவரை எவ்வளவான ஆசை பக்தி சிநேகத்துடன் அரவணைத்தீர்! அவரோவென்றால் உமது திரு இருதயம் எவ்வித சுகிர்த புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததினால் அதில் பிரியமாய் வாசம் பண்ணிக் கொண்டிருந்தார். என் பரிசுத்த அன்னையே! நான் என் அன்புக்குரிய இயேசுவை என் இருதயத்தில் அடிக்கடி வாங்கினாலும் உமக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! என் இதயம் எவ்வித துர்க்குணம் நிறைந்தது. அப்படியிருக்க அந்தப் பரிசுத்தமான சர்வேசுரன் என்னிடத்தில் வருகிறதெப்படி? மாசற்ற கன்னிகையே! உம்முடைய திருக்குமாரனை நினைத்து உம்மை மன்றாடுகிறேன். நான் திவ்விய நற்கருணையைத் தக்க ஆயத்தத்தோடு வாங்கும்படியாகச் செய்தருளும். என்னுடைய இருதயம் உமது திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கும்படிக்கு அதில் தேவ சிநேகமும், மனத்தாழ்ச்சியும், பரிசுத்த கற்பும், திவ்விய பக்தியும் உம்மிடத்தில் இருந்ததுபோல விளங்கச் செய்தருளும்.  


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

ஓ! மரியாயே! தயையுள்ள கன்னிகையே, கிருபாகரியே, கருணாகரியே, அருணோதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..