வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 8ம் திகதி

கர்த்தர் மனித அவதாரம் எடுத்த பரம இரகசியத்தில் புனித கன்னிமரியாயின் மகிமையை விளக்குகிறது குறித்து செபிப்போமாக


செபம்:

 பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே! சகல வரப்பிரசாதங்களுக்கும் காரணமாயிருக்கிற இயேசுநாதரை நீர் பெற்றதினால் சகல ஞான செல்வங்களும் உடையவளாகி

அவைகளை மனிதருக்குக் கொடுக்க உமக்கு வல்லபமும் மனதும் இருக்கிறதைப்பற்றி நான் மகிழ்ச்சியுற்று ஆறுதலடைகிறேன். ஆகையினால் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமக்கு ஒப்புக் கொடுத்து தேவரீர் என் எளிமைத் தனத்தைப் பார்த்து இரங்கி என் சீவிய காலத்திலும் மரண வேளையிலும் எனக்கு வேண்டிய அனுக்கிரகங்களைக் கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.  


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக, தேவதாயே எங்களுக்காக வேண்டிக்- கொள்ளும்.


ü புனித பெர்நர்துவின் செபம் ......

ü சென்ம பாவமில்லாமல் .....

ü விண்ணுலகில்... அருள்... திரி..