- Details
- Super User
- செபங்கள்
- Hits: 163
துன்ப வேளையில் புனித யூதா ததேயுவுக்குச் செபம்
பரிசுத்த அப்போஸ்தலரே, புனித யூதா ததேயுவே, புண்ணியங்களாலும், புதுமைகயாலும் நிறைந்த புகழ்பொங்கும் வேதசாட்சியே, உம்மை வணங்கி உம்மில் நம்பிக்கை வைப்போர்க்கு தாமதியாது பரிந்து பேசும் பரிசீலரே, பெருந்துன்பத்திலுள்ளோருக்குப் பாதுகாவலரும் வல்லபமுள்ள துணைவருமாயிருக்கிறவரே, நான் உமதண்டை வந்து முழு இருதயத்தோடு ஆவலாய் இரந்து மன்றாடுகிறேன். இனி எவ்வித நம்பிக்கையும் இல்லையே என்று தவிக்கும் வேளையிலே, தப்பாது உதவிபுரிந்து தற்காக்கத் தேவனிடம் விசேஷ வரம்பெற்றுத் திகழ்பவரே, உமது வல்லபமிக்க மன்றாட்டால் எனக்கு உதவிபுரிய வாரும். என் பரிதாப நிலையைப்பாரும்.
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 141
காவல் தூதரை நோக்கி செபம்
காவல் தூதரைநோக்கி செபம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் மரபு மன்றாட்டுகளில் ஒன்றாகும். இது காவல் தூதரின் பரிந்துரையினை வேண்டும் விதமாக அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு துவக்கத்தில் கற்றுக்கொடுக்கப்படும் செபங்களில் இதுவும் ஒன்று. இது கடவுளின் அன்பில் கத்தோலிக்க திருச்சபைக்கு இருக்கும் நம்பிக்கையினையும் அவர் அளித்துள்ள அருட்கொடையான காவல் தூதரின் உள்ள நம்பிக்கையினையும் எடுத்தியம்பும் விதமாக அமைந்துள்ளது.
செபம்:
எனக்கு காவலாயிருக்கிற இறைவனின் வானத்தூதரே, இறைவனின் கருனையால் உம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான ஒளியைத்தந்து, என்னை எல்லாத்தீமைகளிலிருந்தும் காத்து நடத்தி ஆண்டருளும் - ஆமென்
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 427
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
† இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே!
தூய்மை துலங்கும் லீலியே!
விலைமதிக்கப்படாத மாணிக்கமே!
விண்ணுலக மண்ணுலக காவலரே!
Read more: புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 378
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 21ம் திகதி
இயேசு கிறிஸ்துநாதர் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்தருளித் தம்முடைய திருத்தாயாருக்குக் காண்பிக்கிறார்.
செபம்:
எல்லாவித சுகிர்த பாக்கியத்தாலும் நிறைந்த தாயாரே! உமது திருமைந்தன் உமக்குக் காணப்படும்பொழுது அந்த மகிமையான இராசாவைத் தொடர்ந்து பிதாப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் ஆதித்தகப்பன், ஆதித்தாய் முதற்கொண்டு நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்த புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் உம்மைத் தங்கள் இராக்கினியாகவும்,
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 437
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 1ம் திகதி
தேவமாதா சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டதின் பேரில் செபிப்போமாக
செபம்: இயேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்.
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 668
தொற்றுநோய் மற்றும் நோய்க்கிருமி பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
அன்பான இயேசுவே, உலகின் மீட்பரே, நாங்கள் உம்மேல் கொண்டுள்ள நம்பிக்கை எம்மை ஒருபோதும் கைவிடாது. எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும்.உலகெங்கும்பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டுகிறோம்.
Read more: தொற்றுநோய் பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 1363
ஜூன் மாதம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது:
தாழ்ச்சியும், தயாளமும் நிறைந்த இதயமே! அன்புத் தீ சுடர்விட்டு எரியும் இதயமே! இதயங்களின் அரசும், மையமுமான இதயமே! ஆறுதல் அனைத்தின் ஊற்றான இதயமே! எங்கள் உயிரும் வாழ்வுமான இயேசுவின் திரு இதயமே!
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஆமென்.
Read more: ஜூன் மாதம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 8004
கல்லறை செபமும் திரு இரத்தப் பிரார்த்தனையும்
திவ்விய இரட்சருடைய கல்லறையில்கண்டெடுக்கப்பட்ட செபம்:
இயேசுவின் நேச இருதயமே! உம் இருதயத்தின் அருள்சுடர் ஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப் பெற்று நான் வாழ, என்னை உமக்கு நிரந்தரமாக அர்பணிக்கிறேன்.
நமது திவ்விய இரட்சருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபத்தின் வரலாறு: