மேலும்,  இறந்த  இயேசுவை  உயிர்த்தெழச்  செய்தவரின்  ஆவி  உங்களுள்  குடிகொண்டிருந்தால்,  கிறிஸ்துவை  உயிர்த்தெழச்செய்த  அவரே  உங்களுள்  குடிகொண்டிருக்கும்  தம்  ஆவியினாலே  சாவுக்குரிய  உங்கள்  உடல்களையும்  உயிர்  பெறச்செய்வார்.  கடவுளின்  ஆவி  உங்களுக்குள்  குடிகொண்டிருந்தால்,  நீங்கள்  ஊனியல்பைக்  கொண்டிராமல்,  ஆவிக்குரிய  இயல்பைக்  கொண்டிருப்பீர்கள்.  கிறிஸ்துவின்  ஆவியைக்  கொண்டிராதோர்  அவருக்கு  உரியோர்  அல்ல.  பாவத்தின்  விளைவாக  உங்கள்  உடல்  செத்ததாயினும்,  கிறிஸ்து  உங்களுள்  இருந்தால்,  நீங்கள்  கடவுளுக்கு  ஏற்புடையவர்கள்  ஆக்கப்படுவீர்கள்;  அதன்  பயனாகத்  தூய  ஆவி  உங்களுக்குள்  உயிராய்  இருக்கும்.
உரோமையர் 8:9-11

வாழ்வின்மீது  பற்று,  இறைவனின்  மறையுண்மைமீதும்,  மனிதர்கள்மீதும்  ஈர்ப்பு  ஆகிய  பண்புகளைக்  கொண்டிருந்த  புனித  2ம்  யோவான்  பவுல்  அவர்கள்,  திருஅவைக்கு  இறைவனால்  வழங்கப்பட்ட  மிகச்சிறந்த  கொடை.  அவரது  நம்பிக்கையை  நினைவுகூர்வோம்.  அந்த  நம்பிக்கை  நமது  சாட்சிய  வாழ்வுக்கு  ஓர்  எடுத்துக்காட்டாக  விளங்கட்டும்.  

– திருத்தந்தை  பிரான்சிஸ் 

வழிபாடுகள்
வழிபாடுகள் இல்லையேல்கிறிஸ்தவமில்லை. திருப்பலியே எம் வாழ்வின் ஊற்றும் உச்சமுமாய் இருக்கின்றது. கத்தோலிக்க நம்பிக்கை வழிபாடுகளின்வழியேதான் வழங்கப்படுகின்றது, வளர்க்கப்படுகின்றது, வாழப்படுகின்றது. தனிநபராகவும் இறைசமுகமாகவும் வாழவும் வாழவும் வழிபடவும் உதவுகின்ற கத்தோலிக்க வழிபாட்டிலக்கியப் பொக்கிஷம் அளவில் விசாலமானது, காலத்தால் பண்பட்டது, கருத்தால் ஆழமானது.

Go to top
Template by JoomlaShine