நிகழ்வுகள்
பேர்கன் புனித பவுல் பங்குக்குழுமத்தில் உயர்த்துடிப்புள்ள ஓர் அங்கமாகச் செயற்பட்டுவரும் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் வாராந்த வழிபாடுகளையும் மாதாந்த திருப்பலிகளையும், வருடம்தோறும் புனிதர் விழாக்களையும் கொண்டாடிவருகிறது. செபக்கூட்டங்களையும், செபமாலை பக்திமுயற்சியையும், தியானங்களையும், திருயாத்திரைகளையும் மேற்கொள்ளுவதும் இதன் வாடிக்கை. ஆன்மிக, கலை, இலக்கிய விழாக்களும் முன்னெடுக்கப்படுகின்றன. மறைக்கல்வி மாணவர்களுக்கான வகுப்புகள் இளையோர்⁄வளர்ந்தோருக்கான கருத்தமர்வுச் செயற்பாடுகள் என நிகழ்வுகளின் பட்டியல் வளர்கின்றது.