Ministries

St.Paul

BERGEN TAMIL KATOLSKE FORENING

DRIFTKONTO: 36242493111

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்

சமூக அளவிலே ஆற்றப்படும் இறைபணிக்கு தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில் அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனித வளங்களையும் ஒன்று திரட்டி திருச்சபையின் பொதுமைக்குள் கொணர்கிறது. பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரணுவைப் போன்றுள்ளது. எனவே, பொதுநிலையினர் தம் சொந்த மறைமாவட்டத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும்.

 

நோர்வே - ஒஸ்லோ மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் ஒன்றுதான் பேர்கன் புனித பவுல் பங்கு. இப்பங்கில் தமிழ் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இத்தமிழ் கத்தோலிக்கர்களின் ஆன்மீக, விசுவாச, சமூக, பண்பாட்டு வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற பொறுப்பு பங்குக் குருவானவருக்கு அடுத்தபடியாக பங்குச்சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பங்குச்சபையே பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் ஆகும்.

 

தோற்றமும் வளர்ச்சியும்:

 

1987 ஆம் ஆண்டு அருட்தந்தை பே. இருதயநாதன் அடிகளாரின் முயற்சியால் தமிழ் கத்தோலிக்கர்களிலிருந்து 9 அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது. சில வருடங்களாக பேர்கனில் தமிழ் குருவானவர் இல்லாத காரணத்தால் செயற்பாடு குன்றியிருந்த இவ் ஒன்றியம் மீண்டும் அருட்தந்தை ஜெகத் பிறேமநாத் குணபாலா அடிகளாரின் வருகையினால் புத்துயிர் பெற்று இன்று 11 அங்கத்தவர்களுடன் பங்கிற்கும் திருச்சபைக்கும் தனது பணியை ஆற்றிவருகிறது.

 

 

செயற்பாடுகள்:

 

1 - குருவுடன் சேர்ந்து பங்கை வழிநடத்துவது.

 

2 - மக்கள் கத்தோலிக்க விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் தொடர்ந்து வாழ உழைத்தல்.

 

3 - பங்கு மக்களிடையே ஒற்றுமையையும் ஒன்றிணைந்து வேலை செய்யும் தன்மையை உருவாக்குதல்.

 

4 - ஆண்டுக்கொருமுறை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவி செய்தல்.

 

5 - பக்திசபைகளுக்கான ஒன்று கூடலை ஒழுங்குபடுத்துதல்.

 

 

 

KONTO

 

kontonavn: Bergen Tamil Katolsk

 

Driftkonto: 36242493111

 

தமிழ் கத்தோலிக்க மறையாசிரியர் குழுமம்

ஆரம்பம்: 13 - 06 - 2004

 

ஸ்தாபகர்: அருட்பணி. ஜெகத் பிறேமநாத் குணபாலா,அமதி.

 

 

றையரசு இம்மண்ணில் வளரவேண்டும். அதுவே திருச்சபையின் ஏக்கமும் தாகமுமாகும். அதுவே அதன் உயிர்மூச்சாகவும் ஒரே செயற்திட்டமாகவும் இருக்கிறது.

 

திருச்சபையின் உயிர்மூச்சாகிய இறையரசை கட்டியெழுப்பும் பணி புலம்பெயர் மண்ணில் வாழும் பொதுநிலையினரிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானதொரு உன்னத பணியினூடாக நாம் வாழும் இச்சமூகத்திலே எதிர்கால சந்ததியினரை மறை அறிவிலும் விசுவாசத்திலும் வளர்த்தெடுக்கவும், கத்தோலிக்க திருச்சபையைக் கட்டியெழுப்பவும் அழைக்கப்பட்டவர்கள் தான் பேர்கன் புனித பவுல் பங்கு தமிழ் மறையாசிரியர் குழுமம். மறைக்கல்வியின் அடிப்படை நோக்கம் இறையரசை வளரச்செய்வதே ஆகும்.

 

செயற்பாடுகள்:

 

1) பங்கில் மறைக்கல்வி வகுப்புக்கள் நடாத்துதல்.

 

2) திருப்பலியில் வழிபாடுகளை ஒழுங்குபடுத்தல்.

 

3) வணக்கமாதமாகிய வைகாசி மாதத்தில் இறையன்னையின் திருச்சுரூபம் வீடுவீடாக எடுத்துச்செல்லப்பட்டு குடும்பத்தவருடன் செபமாலை தியானிப்பதிலும் இறைவார்த்தைப் பகிர்விலும் ஈடுபடல்.

 

4) வருடத்திற்கு ஒருமுறை எமது மறைக்கல்வி மாணவ மாணவியர் மத்தியில் வேதாகமப்போட்டி, பேச்சுப்போட்டி, பாடல்போட்டி போன்றவற்றை நடாத்துதல்.

 

5) பெற்றோர் பெரியவர்கள், மாணவ மாணவியர்களுக்கான கருத்தரங்குகளை நடாத்துதல்.

 

இவ்வாறாக நாம் வாழும் இந்த பேர்கன் மண்ணில் இறையரசைக் கட்டியெழுப்பும் பணியில் குருவுடன் இணைந்து செயலாற்றுகின்றோம்.

தமிழ் கத்தோலிக்க பாடகர் குழாம்

ஒரு முறை பாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம். அதிலும் இன்னிசையால் இறைவனைப் பாடித்துதிக்;கையில் எமது உள்ளங்கள் களிப்படைகின்றன. புலம்பெயர் மண்ணில் பக்திப் பரவசம் பெருகவும், கத்தோலிக்க விசுவாசம் உறுதி பெறவும் 1987 ம் ஆண்டில் அருட்தந்தை இருதயநாதன் அடிகளாரால் இப்பாடகர் குழாம் ஸ்தாபிக்கப்பட்டது. இசையாற்றல் மிக்க, குரல்வளம் மிகுந்த அங்கத்தவர்களைக்கொண்டு பேர்கன் தமிழ் கத்தோலிக்க பாடகர் குழாம் வீறுநடைபோடுகின்றது என்றால் மிகையாகது. இன்று பங்குத்தந்தை ஜெகத் பிறேமநாத் குணபாலா அவர்களின் வழிகாட்டலில், மேலும் பாடகர் குழாம் சிறப்புப்; பெற்று மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்குகின்றது. இசையால்வசமாகா இதயம் ஏது ?

தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பெரும் செல்வாக்குக் கொண்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கைச் சூழல்கள், மனநிலைகள், தங்கள் குடும்பங்களோடு இவர்கள் கொண்டுள்ள பிணைப்பு அனைத்துமே மாற்றம் அடைந்துள்ளன. இவர்கள் புதிய சமூகம், பொருளாதார சூழல்களுக்கு தங்களை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள். சமுதாயத்தில் உயர்வடைந்திருக்கும் இவர்களது செல்வாக்கு திருச்சபையிலும் உயர்வடைய வேண்டுமென்பதே திருச்சபையின் ஆவலாகும். இவர்களிடமிருக்கின்ற ஆற்றல்களை, இயல்பான பண்புகளை இனங்கண்டு, இவர்கள் தங்களைப் பற்றி அதிகம் உணரவைத்து அவர்களை வாழ்வின் நேரிய பாதையில் வழிநடத்துவதே திருச்சபையின் நோக்கமாகும். எமது திருச்சபையின் நோக்கத்திற்கு இணங்க சமுதாய வாழ்விலும், விசுவாச வாழ்விலும், பண்பாட்டு வாழ்விலும் பேர்கன் தமிழ் கத்தோலிக்க இளைஞர்கள் தங்கள் பொறுப்பை உணரவேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டதே பேர்கன் தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்.

தமிழ் கத்தோலிக்க பீடப்பணியாளர்கள்

ஆரம்பம்: 01 - 06 - 2004.

 

ஆரம்பித்தவர்: அருட்பணி. ஜெகத் பிறேமநாத் குணபாலா, அமதி

 

 

ஒவ்வொரு செயலுக்கும் இலக்கு அவசியம். ஆகவே பீடத்தில் உதவி செய்கின்ற பீடப்பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் பணியின் நோக்கத்தை அறிந்து அதனைச் சிறப்பாக செய்து வருகின்றோம். ஆலயத்தில் குருவானவருக்கு அடுத்தபடியாக பீடத்தை நெருங்கியிருப்பதும், புனித பொருட்களை கையாளுவதும் பீடப்பணியாளர்களே. எனவே மிகுந்த பக்தியோடும், மரியாதையோடும் திருப்பலிக்கு உதவி செய்வதே எமது முதல் நோக்கமாகும்.

 

எமது குழுமத்தில் புதுநன்மை எடுத்த பின்பே அங்கத்தவர்களாகலாம்;.

 

புனித மரியாள் சிறுவர் பாடகர் குழாம்